search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் அதிகாரி பலி"

    • கடலின் கரை சகதியாகவும், அலை சீற்றத்துடன் காணப்பட்டதால் எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கிக் கொண்டார்.
    • கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்து நாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பாகூர்:

    மாண்டஸ் புயல் காரணமாக புதுவை கடலில் அலை சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் ராட்சத அலைகள் உருவாகி கரையையே ஆக்கிரமித்து உள்ளது.

    இதே நிலையே கிருமாம்பாக்கத்தையடுத்த பனித்திட்டு, நரம்பை, மு.புதுகுப்பம், தவளக்குப்பம் அருகே நல்லவாடு, சின்ன வீராம்பட்டினம், வீராம்பட்டினம் பகுதியிலும் நிலவுகிறது.

    புயல் கடந்த நிலையிலும் இன்று காலை கடலின் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் பனித்திட்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டு (வயது 62). இவர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இன்று காலை இவர் அப்பகுதியில் உள்ள கடற்கரையில் உடற்பயிற்சி மேற்கொண்டார். பின்னர் கடற்கரையை அலை சீற்றத்தை காண சென்றார்.

    இந்த நிலையில் கடலின் கரை சகதியாகவும், அலை சீற்றத்துடன் காணப்பட்டதால் எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கிக் கொண்டார்.

    தகவல் அறிந்த அப்பகுதி மீனவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மயங்கிய நிலையில் மீட்டனர். மீட்கப்பட்ட பாண்டுவை கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பாண்டு வரும் வழிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்து நாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடற்கரைக்கு உடற்பயிற்சி செய்ய சென்ற ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கடல் அலை சீற்றத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×